பாளை. பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்

நெல்லை, பிப். 15:  தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் 1992-96ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கும் விழா நடந்தது. பள்ளி ஆசிரியை பிரீடா சாலமோன் வரவேற்றார். பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் தலைமையில் நடந்த விழாவில் குழந்தைகள் கேக் வெட்டி மகிழ்ந்தனர். இதில் புனித அலோசியஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் டிஜேஆர் கன்ஸ்ட்ரக்ஷன் தேவேந்திரன், செந்தில்தாஸ், ஆரோக்கியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த...