உவரி அந்தோணியார் பெருவிழாவில் நாளை சிறப்பு மாலை ஆராதனை

திசையன்விளை, பிப். 15:  உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில், நாளை (16ம் தேதி) தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் காலையில் நவநாள் திருப்பலி நடந்து வருகிறது. இன்று(15ம் தேதி) காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருப்பலியை வெளியூர் திருப்பயணிகள் சிறப்பிக்கின்றனர். இரவு 7 மணிக்கு அமலிநகர் பங்குத்தந்தை ரவீந்திரன் ‘புனித அந்தோணியார் நன்நாக்கு அழியா நற்றவர்’ என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்துகிறார். 9 மணிக்கு புனித சகாய அன்னை சங்கீதசபா பாடலுடன் புனித அந்தோணியார் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. 12ம் திருவிழாவான நாளை(16ம் தேதி) காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருப்பலியை இயேசுவின் திருஇருதய கொம்பீரியர் சபையினர், வெளியூர் வாழ் உவரி இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 9 மணிக்கு புனித சகாய அன்னை சங்கீத சபாவின் இன்னிசை கச்சேரி நடக்கிறது.  நாளை மறுநாள் காலை 6.15 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. 9 மணிக்கு திருவனந்தபுரம் அஞ்சன்கோ மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் பாஸ்கரன் வழங்கும் மலையாள திருப்பலி, புனித சகாய அன்னை சங்கீத சபா இன்னிசை, புனித அந்தோணியார் திருவுருவ சப்பர பவனி, 11.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் நடக்கிறது.  ஏற்பாடுகளை தோமினிக் அருள் வளன், ஷிபாகர், திருத்தொண்டர் வில்லியம், திருத்தல நிதிக்குழு மற்றும் பணிக்குழு, அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிஹர பிரசாத் தலைமையில் உவரி இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி செய்து வருகிறார். திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

Related Stories: