இளம்பெண் மாயம்

சங்கரன்கோவில், பிப். 15:  சங்கரன்கோவில் வேப்பங்குளத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (48). இவரது மைத்துனர் அந்தோணிசெல்வம். இவர், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்தாண்டு இருதயராஜின் தங்கை இறந்துவிட்டதையடுத்து சில மாதங்களாக இவரது மகள் ஜமுனாமேரி (18), அந்தோணிசெல்வம் வீட்டில் தங்கியிருந்து உள்ளார்.  இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இருதயராஜ் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

× RELATED இளம்பெண் மாயம்