மணிமுத்தாறு தண்ணீர் வருவதை தடுப்பதை கண்டித்து திசையன்விளையில் விவசாயிகள் உண்ணாவிரதம்

திசையன்விளை, பிப். 15:  திசையன்விளை பகுதிக்கு மணிமுத்தாறு தண்ணீர் வருவதை தடுப்பதை கண்டித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திசையன்விளை பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மணிமுத்தாறு 3 மற்றும் 4வது ரீச்சில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி சுவிசேஷபுரம் குளம் வரை வந்த மணிமுத்தாறு தண்ணீர், திசையன்விளை பகுதிக்கு வரும்முன் தடுக்கப்பட்டு விட்டது. இதனை கண்டித்தும், உடனடியாக இப்பகுதிக்கு தண்ணீர் கேட்டும் நேற்று விவசாயிகள், அரசியல் கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காங். மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக்முருகன் தலைமை வகித்தார். எம்.எல்.தேரி விவசாயிகள் சங்க தலைவர் சுதாகர் பாலாஜி, சுப்பிரமணியன், தேமுதிக நகர செயலாளர் நடேஷ் ஆனந்த் முன்னிலை வகித்தனர். இட்டமொழி ஆசிரியர் ஜான்சன் வரவேற்றார். காங். கலைப்பிரிவு தலைவர் மணிமாறன், நகர தலைவர் ராஜன், நகர மகளிரணி தலைவி கார்த்திகா, நகர செயலாளர் சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் நடராஜன், பொன்ராஜ், அமைப்பு சாரா தொழிலாளர் நகர தலைவர் தேவதாசன், ராஜமிக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை வக்கீல் ஜெயராஜ் பழசரம் கொடுத்து முடித்து வைத்தார். முன்னாள் நகர தலைவர் பிலிப்போஸ் டேனியல் நன்றி கூறினார்.

Related Stories: