சாலை பாதுகாப்பு வார விழா போட்டிகள் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி

சேலம், பிப்.15:  ேசலம் சாரதா மேல்நிலைப்பள்ளியில்  30வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, மண்டல அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் செந்தில் பப்ளிக் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழ் பேச்சுப்போட்டியில் சிதம்பரவேல் ஆகாஷ் இரண்டாமிடம், தமிழ் வாசகங்கள் எழுதும் போட்டியில் ரிதன்யா முதலிடம், தமிழ் கட்டுரைப்போட்டியில் யுகாசினி இரண்டாமிடம், ஓவியப்போட்டியில் யுத்தா முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். தொடர்ந்து கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் பேச்சுப்போட்டியில் சிதம்பரவேல் ஆகாஷ், வாசகங்கள் எழுதும் போட்டியில் ரிதன்யா, ஓவியப்போட்டியில் யுக்தா ஆகிய மூவரும் இரண்டமிடத்தை பெற்றனர்.  இவர்களுக்கு கலெக்டர் ரோகிணி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் செந்தில் குழுமத் தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகரன், தாளாளர் தீப்தி தனசேகரன், முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதுல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, பொறுப்பாசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.     

× RELATED சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு துண்டு பிரசும்