விஎம்கேவி பொறியியல் கல்லூரியில் போஷ் நிறுவனத்தின் கூட்டு பயிற்சி

சேலம்,  பிப்.15:   சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தை  சார்ந்த உறுப்பு கல்லூரியான, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார்  பொறியியல் கல்லூரியுடன், பெங்களூரு போஷ் லிமிடெட் இணைந்து, பொறியியல்  கல்லூரி மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துதல், ஆட்டோமொபல் நிறுவனங்களின்  வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான தொழிற்சார்ந்த பயிற்சிகளை வழங்க  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தொழிற்பயிற்சி  மையத்தின் துவக்க விழா, விநாயகா மிஷன்ஸ்  பொறியியல் கல்லூரியில் நடந்தது.  விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவன  வேந்தரின் துணைவியார் அன்னபூரணி சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக பெங்களூரு ேபாஷ் நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவை பொதுமேலாளர் ஆனந்தகுமார் கலந்துகொண்டு,  நிறுவனத்தில் உள்ள அதிநவீன வசதிகளை பற்றியும், இதை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் எடுத்துரைத்தார். விநாயகா  மிஷன்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  பேராசிரியர் சுதிர், மாணவ,மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக துணை முதல்வர் குமரேசன் வரவேற்றார். துறைத் தலைவர் ராஜன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துறை ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Related Stories: