வீரகனூர் அருகே லாரி மீது டூவீலர் மோதி புது மாப்பிள்ளை பலி

கெங்கவல்லி,  பிப்.15: சேலம்  மாவட்டம், வீரகனூர் அருகே கிழக்கு ராஜாபாளையம், நத்தக்காடு பகுதியை  சேர்ந்த கருவேப்பிலை வியாபாரி ஆனந்தன்(25). இவருக்கு, கடந்த 3 மாதத்திற்கு  முன் சிவலட்சுமி (23) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. நேற்று  முன்தினம் இரவு 8 மணியளவில், டூவீலரில் தலைவாசலுக்கு சென்றுவிட்டு,  மீண்டும் கிழக்கு ராஜாபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது  இலுப்பநத்தம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது,  ஆனந்தனின் டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்,  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து,  சம்பவ இடத்துக்கு வந்த வீரகனூர் போலீசார், ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து  குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3  மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: