திமுக செயல்வீரர்கள் கூட்டம்

மேட்டூர், பிப்.15: நங்கவள்ளி ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்,  நேற்று மேட்டூர் அடுத்த ராமன் நகரில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர்  ராஜூ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோபால், மேற்கு மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்  வரவேற்று பேசினார். இதில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம்,  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் இளங்கேவன், மாவட்ட  செயலாளர் தடங்கம் சுப்ரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு வாக்குசேகரிக்கும் விதம்,. வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிகையின் போது விழிப்புடன் செயல்பட வேண்டிய விதம் குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேரூர் செயலாளர்கள்  அல்லிமுத்து, பொன்னுவேல், கோனூர் கிராம  செயலாளர் சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

× RELATED திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம்