×

திமுக கிராம சபை கூட்டம்

நாமகிரிப்பேட்டை, பிப்.15: நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் திமுக கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமசுவாமி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களிடம் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர். கூட்டத்தில் பெண்கள் திரளாக பங்கேற்று, முதியோர் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை. தெருவிளக்குகள் பராமரிக்கப்படவில்லை. குடிநீர் பற்றாக்குறை உள்ளது என சரமாரியாக புகார் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென காந்திசெல்வன் உறுதி கூறினார். இந்த கூட்டத்தில் பேரூர் செயலாளர்கள் அன்பழகன், செல்வராசு, ஜெயகுமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய அவைத்தலைவர் கருப்பண்ணன், ஒன்றிய பொருளாளர் நடேசன், ஊராட்சி செயலாளர்கள் ராஜமாணிக்கம், ராஜேந்திரன், வேல்முருகன், முருகன், காசி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில், திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. நவணி பாச்சல், கண்ணூர்பட்டி, நாட்டாமங்கலம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் கௌதம் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சாலை மற்றும் குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளின்றி அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவித்தனர். கூட்டத்தில் சார்பு அணி துணை அமைப்பாளர்கள் மேனகா, பாபு, சுகுமார், ஊராட்சி செயலாளர்கள் குமார், செந்தில்குமார், பெரியசாமி, ராமமூர்த்தி, கருணாநிதி, சக்திவேல், சந்திரன், நல்லதம்பி, வருதராசு, வீரப்பன், வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : DMK Gram Sabha ,meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்