நாமக்கல் டிஇஓ ஆத்தூருக்கு மாற்றம் புதிய கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

நாமக்கல், பிப்.15:  நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலராக மின்னக்கல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு, கடந்த 4 மாதமாக கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது, அவர் பதவி உயர்வு பெற்று ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சேலம் மாவட்டம் ஆரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சேக் உஷேன், பதவி உயர்வு மூலம் நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று மாலை நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரிடம், பதவி உயர்வில் செல்லும் டிஇஓ(பொ) தங்கவேலு பொறுப்புகளை ஒப்படைத்தார். இருவருக்கும் கல்வி மாவட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், பள்ளி துணை ஆய்வாளர் சந்திரசேரகன் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

× RELATED நாமக்கல் வழியே கரூர்-சென்னைக்கு பகல் நேர ரயில்