ராசிபுரம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 28ம் தேதி கடைசி நாள்

ராசிபுரம், பிப்.15:  ராசிபுரம் நகராட்சிக்குண்டான சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை வரும் 28ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையாளர் நடேசன்(பொ) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ராசிபுரம் நகராட்சி பகுதி மக்களுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இடைப்பாடி-ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், நெடுங்குளம் காட்டூர் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், 2018-19ம் ஆண்டிற்க்கான குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரியினங்களை வரும் 28ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து, அபராதம் விதிக்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக நகராட்சி அலுவலக கணினி வசூல் மையம், சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED அரசின் அலட்சியத்தால் கிடப்பில்...