ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

நாமக்கல், பிப்.15:  நாமக்கல்லை அடுத்த மோகனூரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோகனூர் அருகே லத்துவாடியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையினை நேரில் பார்வையிட்ட கலெக்டர், அரிசி மற்றும் கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் இருப்பை சரிபார்த்தார். மேலும், விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு ெசய்தார். அதனைத்தொடர்ந்து மோகனூர், பேட்டைபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளையும் மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களோடு சரிபார்த்தார். அப்போது, பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, விற்பனையாளர் சரியான நேரத்திற்கு வருகிறாரா என்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இலாஹிஜான், வட்ட வழங்கல் அலுவலர் விஜயகாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

× RELATED கீ - விமர்சனம்