டிரினிடி பள்ளியில் 30ம் ஆண்டு விழா

நாமக்கல், பிப்.15: நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 30ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் குழந்தைவேல் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் செங்கோடன் முன்னிலை வகித்தார். விழாவில் சேலம் நியூரோ பவுண்டேசன் தலைவர் மருத்துவர் நடராஜன், தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மேலும், முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் முன்னாள் மாணவர்களான பல் மருத்துவர் சுரேஷ், பொறியாளர் சந்தியா மற்றும் ஆடிட்டர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, மாணவர்கள் முன்னேற்றத்துக்கு அறிவுரை வழங்கினர். அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் சந்திரசேகரன், தயாளன், கல்விக்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED ராசிபுரத்தில் பூட்டிக்கிடக்கும் நகராட்சி பூங்கா