×

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

சேலம், பிப்.15: கோடை விடுமுறையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியே நாகர்கோவில், எர்ணாகுளத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
 சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில்(06007) இடையே ஏப்ரல் 2,9,23 மற்றும் மே 7,14,21, 28ம் தேதிகளில்  இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். இதேபோல், நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் (06008) இடையே ஏப்ரல் 3,10,17,24 மற்றும் மே 1,8,15,22,29ம் தேதிகளில் இயக்கப்படும், இந்த சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயில்கள், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக எர்ணாகுளத்துக்கு செல்கிறது. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்கிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai Central ,Nagercoil ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!