×

பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவருக்கு ₹5 ஆயிரம் அபராதம்

சேலம், பிப்.15:  தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 மண்டலங்களுக்கு உட்பட்ட  இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு குழுவினர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும், இதுவரை  9.7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ₹3 லட்சத்து 79,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
 இதனிடையே,  கண்காணிப்பு குழுவினர்  அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பட்டை கோவில் அருகில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ₹30 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆட்டோவில் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இந்த ஆட்டோவுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஆட்டோ டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோ டிரைவர் எந்த கடையில் இருந்து வாங்கி வந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : auto driver ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...