×

புளி உலுப்பும் பணி தொடக்கம்

தர்மபுரி, பிப்.15: தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் அதிகளவில் புளி விளைச்சல் உள்ளது. கேரளாவில் டிசம்பர் மாதத்திலும், ஜனவரியில் கர்நாடகாவிலும், மார்ச் மாதத்தில் தமிழகத்திலும் புளி சீசன் தொடங்கும். தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மைசூர் புளி, தர்மபுரி மாவட்டத்தில் விற்பனை செய்யபட்டு வருகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் புளி சீசன் தொடங்கியதையடுத்து, தர்மபுரி நகரில் மதிகோண்பாளையம், பழைய தர்மபுரி ஆகிய இடங்களில், சாலையோரம் புளியமரங்களில் இருந்து புளியம்பழத்தை உலுப்பும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த புளியம்பழத்தின் மேல் ஓடுகளை உறித்து உதிரி புளியாகவும், தோசை புளியாகவும் தயாரித்து கடைவீதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஓட்டுடன் கூடிய புளியம்பழம் கிலோ ₹25 வரை விற்பனையாகிறது. உதிரி புளி ₹100க்கும், தோசை புளி ₹140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா