×

எழுநூற்றுமங்கலத்தில் மயானப்பாதை, நீர்த்தேக்க தொட்டி வசதி இன்றி அவதி திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கிராம மக்கள் குற்றச்சாட்டு

குளித்தலை, பிப். 15: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், மணத்தட்டை ஊராட்சி எழுநூற்றுமங்கலத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ ராமர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், பொதுக்குழு சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ரகுபதி அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் மணத்தட்டை ஊராட்சி எழுநூற்றுமங்கலம் கிராமம் வழியாக தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகள் மட்டும் பேருந்து வசதி உள்ளது. இதனால் மற்ற நேரங்களில் 2 கிமீ தூரம் நடந்து சென்று தான் பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் எங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் தற்போது உதவித்தொகை கிடைக்காததால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அதனால் உதவித்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எழுநூற்று மங்கலம் கிராமத்தில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு உரிய மயானப்பாதை வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு இடையே எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் இறந்தவர்கள் உடலை எடுத்துச்செல்வதற்கு மயானப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இப்பகுதியில் அதிக மக்கள் தொகை இருப்பதால் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், சமுதாயக்கூடமும் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதில் அளித்த எம்எல்ஏ ராமர் கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில் பேரூர் செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர் சந்திரமோகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : panchayat council meeting ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி