×

கரூர் பகுதியில் மயில்களிடம் இருந்து பாதுகாக்க வயலை சுற்றிலும் வேலி அமைக்கும் விவசாயிகள்

கரூர், பிப். 15: கரூர் பாலம்மாள்புரம் அருகே மயில்களின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் நெல் விளைவித்து வரும் விவசாயிகள் வயல்களை சுற்றிலும் வேலி அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.கரூர் பாலம்மாள்புரம் அரசு காலனி போன்ற பகுதிகளை சுற்றிலும் அமராவதி ஆற்றங்கரையோரம் நெல் முதல் பல்வேறு விவசாயப் பொருட்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலம்மாள்புரம் அருகே ஏக்கர் கணக்கில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் அறுவடை பக்குவத்தில் இந்த பகுதியில் சுற்றித்திரியும் மயில்கள் வயலில் இறங்கி, நெற்மணிகளை தின்று செல்வதால் பல முறை விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.மேலும் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அறுவடை சமயத்தில் விவசாயிகள், சாகுபடி நிலங்களை சுற்றிலும் பந்தல் அமைத்து பாதுகாத்து வருகின்றனர். பந்தலை பார்த்து மயில்கள் வராமல் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்களில் துணிகளை வைத்து பந்தல் அமைக்கப்பட்டு பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : field ,area ,Karur ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது