×

நாடாளுமன்ற தேர்தலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு

கரூர், பிப். 15: நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியாற்றவுள்ள மண்டல பொறுப்பாளர்களுக்கும், சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்களுக்குமான பயிற்சி வகுப்பு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியது:நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019ல் வாக்குச்சாவடி மையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மண்டல அலுவலர்களுக்கும், சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்களுக்கும் பயிற்சி அளிக்க இக்கூட்டம் நடத்தப்படுகிறது. கருத்துக்களை கவனமாக கேட்டு அனைவரும் உங்கள் மண்டலத்திற்குட்பட்ட, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும். தேர்தலில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தேர்தல் நாளன்று செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மேலும் இந்த தேர்தலில் புதிதாக பயன்படுத்தப்பட உள்ள வாக்களித்தமைக்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் குறித்தும் இந்தபயிற்சியில் விளக்கப்படுகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார். குளித்தலை ஆர்டிஓ லியாகத் பயிற்சி அளித்தார். கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 91 மண்டல அலுவலர்கள், சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.


Tags : Collector ,elections ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...