×

கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் தக்காளி விலை வீழ்ச்சி

கிலோ ரூ.8க்கு விற்பனை
கரூர், பிப். 15: தக்காளி விலை வீழ்ச்சியடைந்து உழவர் சந்தைகளில் கிலோ ரூ.8க்கு விற்பனை செய்யப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் கிணற்றுப்பாசனத்தில் அறுவடை செய்யப்படும் தக்காளி பழங்கள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் தர்மபுரி அருகே உள்ள ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்தும் வரத்து அதிகமாக இருக்கிறது. கிலோ ரூ.30 முதல் ரூ.35வரை விற்பனையான தக்காளி கடந்த மாதம் கிலோ ரூ.20 ஆக இருந்தது.கடந்த சில தினங்களாக விலை வீழ்ச்சியடைந்து கொண்டே வந்தது. நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் கிலோ ரூ.8 ஆக விலை சரிந்தது. கடைகளில் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். தக்காளியை 2 நாளைக்கு மேல் வைத்திருந்து விற்க முடியாது என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. தக்காளியை சேமித்து வைத்து விற்பனை செய்ய குளிர்பதன கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.



Tags : farmers' markets ,district ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...