கரூர் அரசு காலனி செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் பீறிடும் அவலம்

கரூர், பிப். 15: கரூர் அரசு காலனி செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் அரசு காலனி வழியாக கரூர் பகுதிக்கு பிரதான குழாய்கள் மூலம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு காலனி அடுத்துள்ள சாலையோரம் செல்லும் குழாயில் கடந்த சில நாட்களாக லேசான உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியே செல்கிறது. சாலையோரம் அனைவரின் பார்வைபடும் வகையில் இந்த உடைப்பு உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பணியாளர்கள் மூலம் இதனை சரி செய்ய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.× RELATED கரூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவக்கம்