×

குளித்தலை பகுதியில் நகர நில வரி திட்டம் இணையதளத்தில் பட்டாக்களை பதிவேற்றம் செய்ததில் குளறுபடி உதவித்தொகை கிடைக்குமா என விவசாயிகள் கவலை

குளித்தலை, பிப். 15: குளித்தலை பகுதியில் நகர நிலவரி திட்டத்தின்கீழ் அரசு இணையதளத்தில் பட்டாக்களை பதிவேற்றம் செய்ததில் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளன. இதனால் பிரதமர் அறிவித்த ஊக்க உதவித்தொகை கிடைக்குமா என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட மணத்தட்டை, கடம்பர்கோவில், வைகநல்லூர் வடக்கு கிராமத்தின் ஒரு பகுதி ஆகிய வருவாய் கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகர நிலவரி திட்டம் தொடங்கப்பட்டு சர்வேயர் மூலமாக விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் அனுபவத்தின் படியும், பத்திரத்தின் படியும் அளவீட்டு பணிகள் செய்யப்பட்டு வார்டு மற்றும் பிளாக்குகள் புதிய நகர புல எண்கள் உட்பிரிவுகள் செய்யப்பட்டது.அதன் பிறகு புகைப்படத்துடன் கூடிய பட்டாக்களை அமைச்சர்கள் அரசு விழாக்களில் விவசாயிகளுக்கு வழங்கினர். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நகர நிலவரி திட்டத்தில் கொடுக்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் அரசு இணைய தளத்தில் சரிவர பதிவேற்றம் செய்யப்படாமல் இறந்து போனவர்கள் பெயரிலும், நிலத்தை விற்றவர்கள் பெயரிலும் விவசாய நிலங்களும் வீட்டுமனைகளும் குளறுபடியாக செய்யப்பட்டுள்ளதால் சிறு குறு விவசாயிகள் பிரதமர் அறிவித்த உதவி தொகை கிடைக்குமா என்ற கவலையில் ஏக்கத்துடன் உள்ளனர். எனவே இந்த குறைகளை நிவர்த்தி செய்திட மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்தி அரசு இணைய தளத்தில் சரிவர பதிவேற்றம் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...