கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது குருக்கத்தி அரசு பள்ளியில் தேசிய பாதுகாப்பு வார விழா

கீழ்வேளூர், பிப்.15: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓஎன்ஜிசி சார்பில் 46 வது தேசிய பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதன்மை பொறியாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிகா வரவேற்றார். நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி.யின் பொது மேலாளர் தங்கராஜ் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் மற்றும் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியை தொடங்கி வைத்து உபகரணங்களை வழங்கி பேசினார். முதன்மை பொறியாளர் மணி, பொறியாளர் தியாகராஜன், மற்றும் பொற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.    

× RELATED தென்காசியில் பறை அரங்கேற்ற விழா