காரைக்காலில் கயிலாசநாதர் தேவஸ்தான அலுவலகம், பசுமடம் திறப்பு

காரைக்கால், பிப்.15: காரைக்கால் கயிலாசநாதர் கோயில் தேவஸ்தான அலுவலகம் மற்றும் பசுமடம் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் கயிலாசநாதசுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்கு, காரைக்கால் அம்மையார் கோயில் அருகே, புதியதாக அமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் மற்றும் கயிலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட பசுமடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அசனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அலுவலகம் கட்டிடம் மற்றும் பசுமடத்தை திறந்து வைத்தார். விழாவில், மாவட்ட கலெக்டரும், கோயில்கள் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த் ராஜா, காரை நகராட்சி ஆணையர் சுபாஷ், கோயில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளார் பக்கிரிசாமி பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.    


× RELATED மூடிக்கிடந்த தொட்டில் குழந்தை மையம் திறப்பு