வேதாரண்யம் அருகே கோடியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு

வேதாரண்யம், பிப்.15: வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகத்தில் கோடியம்மன் கோயில் உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாணிக்கோட்டகம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடியம்மன் முனியதம்பிரான் கோயில் உள்ளது.  இக்கோயில் பூசாரி பரமசிவம் வழக்கம்போல் நேற்று முன்தினம் கோயிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை பூஜை செய்ய கோயிலுக்கு சென்றபோது.

இக்கோயிலின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 அடி உயரமுள்ள உலோகத்தாலான உண்டியலை காணவில்லை. இந்த உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.    வழக்கமாக இக்கோயிலின் ஆண்டு பெருவிழாவின்போது அதாவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். உண்டியலைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் கோயிலுனுள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் துண்டித்து சென்றனர்.  இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
× RELATED தேவாலயம், 4 கடைகளை உடைத்து பணம் திருட்டு