இலவச பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

நாகை, பிப். 15: இலவச பட்டா கேட்டு நாகை கலெக்டரிடம் நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நல சங்கம் மனு அளித்துள்ளது.நாகை, திருவாரூர் மாவட்ட  நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க  தலைவர் பாஸ்கர் நாகை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவதுநாகை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் வசித்து வரும் 20 குடும்பத்தினர் இலவச பட்டா வாங்க தகுதியானவர்களாக உள்ளனர்.  இவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கூறி விட்டு இதுவரை இலவச பட்ட வழங்கவில்லை. அந்த இடத்தில் குடியிருக்கும் 20 பேரும் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள். மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து உடனே இலவச பட்டா வழங்கிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.     


× RELATED புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக...