×

ரூ.700க்கு பதில் 400க்கு விற்பதால் மக்கள் அச்சம் மயிலாடுதுறையில் கலப்பட பனைவெல்லம் விற்பனையா?

மயிலாடுதுறை பிப்.15: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கலப்பட பனைவெல்லம் விற்பனை செய்யப்படுகிறதா என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.நவீன காலத்தில் வெள்ளைச் சர்க்கரை எனப்படும் சீனியால் மனிதனது மூட்டுக்களில் உள்ள நீர் குறைந்து குறிப்பிட்ட வயதில் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்து அதை பரப்பி வருகின்றனர், கரும்பிலிருந்து சீனியை தயாரிக்கும்போதும் அவற்றை வெண்மை நிறமாக்கும்போதும், சீனியில் உள்ள அழுக்கை நீக்குவதற்கும் குறிப்பிட்ட ரசாயனப் பொருட்களை கட்டாயம் கலந்தே ஆகவேண்டிய சூழல் உள்ளது. இந்த ரசாயனப் பொருட்கள் சீனியில் கலந்து அதுவே மனிதனது அன்றாட உணவுப்பொருட்களில் எந்த வடிவத்திலாவது கலந்து விடுகிறது.  சீனி இல்லாத வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  80 வயதிற்குமேல் மூட்டுவலி வந்த நிலை மாறி 40 வயதிற்குள் மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது. டாக்டரிடம் சென்றால் மூட்டில் உள்ள பசை காலியாகி விட்டது. அவற்றை சரிசெய்வதற்கு தேயைான பசைக்கு மீண்டும் ரசாயனம் கலந்து மாத்திரைகளையே விழுங்க வேண்டியுள்ளது.  இதனால் குறிப்பிட்ட காலத்தில் கால், கை நடமாட்டம் குறைந்து படுத்தபடுக்கையாகி விடுகின்றனர்.  இதிலிருந்து தப்பிப்பதற்கு சீனியை தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் வண்ணம் மங்கலாக உள்ள சர்க்கரை மட்டுமே எந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று நாட்டு சர்க்கரையை பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இதனை உபயோகப்படுத்தப்படும் போது மூட்டில் உள்ள பசைக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அடிக்கடி சித்த மருத்துவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் மக்கள் சீனியை படிப்படியாகத் தவிர்த்து வருகின்றனர்.    

ஒருகிலோ நாட்டுச் சாக்கரை விலை ரூ.60 என்றும் இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கிலோ ரூ.100 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை குறிப்பிட்ட அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.  இதனால் நாட்டுச் சர்க்கரை மற்றும் நாட்டுவெல்லத்தின் தேவை அதிகரித்து வருகிறது.  நாட்டு சர்க்கரையை விட அதிக நன்மை கொண்டது பனை வெல்லம். இன்றைக்கும் கிராம பகுதிகளில் கருப்பட்டி எனப்படும் பனைவெல்லத்தை பல்வேறு மருத்துவபயன்பாட்டில் கலந்து வருகிறார்கள். தென் மாவட்டங்களில் உற்பத்தியாகி அது விற்பனைக்கு தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.  பனைவெல்லமானது மளிகை கடையில் ரூ.150 என்றும் மற்றும் காதி வஸ்திராலயம் போன்றவற்றில் ரூ.300முதல் விற்பனை செய்யப்படுகிறது.  ஒவ்வொரு கடைக்கும் விலை வித்தியாசம் உள்ளது.  இந்நிலையில் திருநெல்வேலியிலிருந்து பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் சுக்குப் பனைவெல்லம் போன்றவ்றை விற்பனை செய்ய வடமாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனையாளர்கள் சாலை ஓரத்தில் கடைவிரித்துள்ளனர்.  அவர்களிடம் சென்று கேட்டால் ஒருகிலோ பனைவெல்லம் ரூ.150 என்றும் ஒரு ரகம் ரூ.240, 400 என்றும் விலை கூறுகின்றனர். கேட்டால் பனைவெல்லம் பல்வேறு ரகங்களில் உள்ளது. ஒரு கிலோ ரூ.700 வரை விற்பனையாகிறது, அதன் தரத்திற்கேற்ற படி விலை உள்ளது என்கின்றனர். அனைத்துமே பனைவெல்லம் தானா இதில் ஏதேனும் கலப்படம் உண்டா என்று பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.  இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனை மையங்களில் கிலோ ரூ.400 என்ற விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற விற்பனை விலை நிலவரம் குறித்து பனைவெல்லம் தயாரிப்போர் அல்லது காதிவஸ்திராலய அதிகாரிகள்தான் விளக்க வேண்டும். மக்கள் மீண்டும் கடந்த காலத்தில் உபயோகப்படுத்திய உணவுப் பொருட்களுக்கு மாறும் வேளையை கலப்படக்காரர்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்பதால் பனைவெல்லம்  குறித்து முழுமையான அறிக்கையை அரசோ சம்பந்தப்பட்ட துறையினரோ விளக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பதில் கூற மறுப்புபனைவெல்லத்தில் தரம் பிரிக்கப்படுவது குறித்து அங்குள்ள விற்பனையாளர்களிடம் கேட்டபோது, முறையான பதில் கூற மறுக்கின்றனர். எனவே ஒரிஜினல் ரூ.700 விற்பக்கப்படும் ரகம் ஏன் இங்கு கொண்டு வர மறுக்கின்றனர் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...