×

அழகர்கோணம் மலையில் பயங்கர தீ மரங்கள் எரிந்து சாம்பல்

நாகர்கோவில், பிப். 15: நாகர்கோவில் அருகே அழகர்கோணம் மலையில் தீவிபத்து ஏற்பட்டு பற்றி எரிகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் அடிக்கடி காட்டு தீ பிடித்து வருகிறது. நாகர்கோவில் களியங்காட்டிற்கும் இறச்சகுளத்திற்கும் இடைப்பட்ட  அழகர்கோணம் மலையில் நேற்று முன்தினம் தீ பிடித்து தொடர்ந்து எரிந்து வருகிறது.  காற்று வேகமாக வீசி வருவதால் தீயும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மலை முழுவதும் கரும் புகையாக காட்சி அளிக்கிறது. காற்றின் வேகம் குறையும்போது தீயின் வேகமும் குறைகிறது. மலையில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் 2 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காற்றுவீசுவதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்த மலையில் வனவிலங்குகள் இல்லை. ஆனால் மரங்கள், மூலிகைகள் அதிக அளவு உள்ளது. அவைகள் இந்த காட்டு தீயால் கருகி வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:  குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வனவிலங்குள் அதிக அளவு உள்ளது. களியங்காட்டில் இருந்து இறச்சகுளம் செல்லும் பகுதியில் உள்ள மலைகள் வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் வனவிலங்குகள் கிடையாது. அழகர்கோணம் பகுதியில் மலையையொட்டி பல வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வருபவர்கள்  தீ வைத்து இருக்கலாம் என கருதுகிறோம். இந்த மலையில் கடந்த 2 வருடமாக எந்த வித தீவிபத்தும் ஏற்படவில்ைல. மலையில் பிடித்த தீயை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் போராடி வருகின்றனர் என்றார்.

Tags : mountains ,
× RELATED கொடைக்கானலில் இணக்கமான தட்பவெப்பம்!:...