×

காதலர் தின கொண்டாட்டம் குமரி சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து அமைப்பினர்

நாகர்கோவில், பிப். 15: காதலர் தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதனையொட்டி சுற்றுலா தலங்களில் காதல்ஜோடிகள் குவிந்தனர். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மகா சபாவினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
 காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பூங்காக்களில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் நகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நேற்று காலை முதல் இளம் ஜோடிகள் பலர் வந்தனர். கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என  பலரும் ஜோடி ஜோடியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் பூங்காவுக்குள் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 இதே போல் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குதுறை பீச், மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களிலும் காதல் ஜோடிகள் குவிந்தனர். தியேட்டர்கள், ஓட்டல்கள், கோயில்களிலும் காதல் ஜோடிகளை காண முடிந்தது. ஏற்கனவே காதலர்  தினத்துக்கு எதிர்ப்பு இருந்ததால் வேப்பமூடு பூங்கா, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை பகுதி மற்றும் மாவட்ட முழுவதும் போலீசார் ரோந்து வந்தனர். எல்லை மீறி நடந்து கொண்ட காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.நாய்களுக்கு திருமணம்: காதலர் தினத்திற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த காதலர் தினங்களில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தல், பொது இடங்களில் அத்துமீறும் காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தல் போன்ற சம்பவங்கள் நடந்தன. நேற்று இந்து மகா சபாவினர் எறும்புகாடு பகுதியில் 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

கன்னியாகுமரியில் அத்துமீறல்
கன்னியாகுமரி:  வழக்கமாக  காதலர் தினத்தில் கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவது  வழக்கம். அப்போது எல்லை மீறும் காதலர்களை எச்சரித்து அனுப்பி வைக்கின்ற  சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்கு மாறாக இந்த வருடம்  போலீசார் நடமாட்டத்தை  காண முடியவில்லை.

இது காதலர்களுக்கு சாதகமாய் போய்விட்டது. எந்த  வித அச்சமும் இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். ஆட்கள் நடமாட்டம்  குறைவான நேரத்தில் காதலர்கள் அத்துமீறுவதும்  ஆங்காங்கே அரங்கேறின. இது குடும்பத்துடன் சுற்றுலா வந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இதுகுறித்து  போலீஸ் தரப்பில் கேட்டபோது, கள்ளக்காதல் விவகாரத்தில் யார் மீதும்  நடவடிக்ைக எடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்  விருப்பப்படி காதல் செய்யலாம் என்ற நிலை உள்ளது என்பதை காரணமாக  தெரிவித்தனர்.

Tags : organization ,Valentine's Day Celebration Kumari ,
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...