பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை சரகத்தில் 236 எஸ்ஐ இடமாற்றம் டிஐஜி கபில்குமார் சரத்கர் உத்தரவு

நாகர்கோவில், பிப். 15:  பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் 236 எஸ்ஐக்களை  இடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.
 பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளன. அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காவல் துறையில் உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

நெல்லை சரகத்திற்கு உள்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 236 எஸ்ஐக்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டத்தில் இருந்து 52 பேர் நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுபோல் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 57 பேர் குமரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர் பிறப்பித்துள்ளார்.× RELATED கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவில்...