குமரியில் நாளை அம்மா திட்ட முகாம்கள் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், பிப்.15: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாம் இன்று (15ம் தேதி) குமரி மாவட்டத்தில் வடசேரி மேற்கு வருவாய் கிராமத்திற்கு மட்டும், வெட்டூர்ணிடம் சால்வோஷன் ஆர்மி மேல்நிலைப்பள்ளி, அனந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு அனந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கப்பியறை ‘ஆ’ வருவாய் கிராமத்திற்கு பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி, இடைகோடு வருவாய் கிராமத்திற்கு கல்லுப்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த அம்மா திட்ட ஐந்தாம் கட்ட சிறப்பு முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன்கார்டு, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


× RELATED குமரி மருத்துவக்கல்லூரியில் பொது,...