×

குமரியில் 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், பிப்.15: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குமரி மாவட்டத்தில் கும்பப்பூ நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டிற்கு 1.10.2018 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையுடன் நெல் ‘கிரேடு ஏ’க்கு குறைந்தபட்ச விலை ரூ.1770, ஊக்கத்தொகை ரூ.70 என்று ரூ.1840ம், நெல் பொது ரகத்திற்கு ரூ.1750, ஊக்கத்தொகை ரூ.50 என்று மொத்தம் ரூ.1800 என்ற ெதாகைக்கு நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.   குமரி மாவட்டத்தில் திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம், தாழக்குடி அங்கன்வாடி மையம், நாகர்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், குருந்தன்கோடு வட்டாரத்திற்கு திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடம், தேரூர் கவிமணி நூல் நிலையம், செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் அலுவலகம் எதிரில் உள்ளிட்ட 6 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. நெல் கொள்முதலுக்கு கொண்டு வரும்போது விவசாயிகள் 50 கிலோ சிப்பமிட்டு கரத்தீர்வை ரசீது, சிட்டா அடங்கல், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோடு உள்ள வங்கி புத்தக முன் பக்க தெளிவான ஜெராக்ஸ் ஆகியவற்றை சமர்ப்பித்து பயன் பெறலாம்.  இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Paddy ,places ,Kumari ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...