பெரணமல்லூர் அருகே பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கண் பார்வையற்ற தம்பதிகளுக்கு புதிய வீடு சாவியை கலெக்டர் வழங்கினார்

பெரணமல்லூர், பிப்.15: பெரணமல்லூர் அருகே கண் பார்வையற்ற தம்பதியரின் கோரிக்கை மனுவினை ஏற்று பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டிற்கான சாவியை கலெக்டர் தம்பதிகளுக்கு வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், வெளுக்கம்பட்டு பழனியாண்டி மகள் வனிதா. இவருக்கு பிறவியிலேயே கண்பார்வை கிடையாது. மேலும் இவரது அம்மா சிறு வயதில் இறந்துவிட்ட நிலையில் தந்தை கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.ேமலும், இவர் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கண்பார்வையற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் மேல்நிலைப்பள்ளி படிப்பும், பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்று ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு தான் படித்த அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.மேலும், கண்பார்வையற்ற திருப்பதி என்பவரை மணமுடித்து குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கலெக்டரிடம் வீடு வேண்டி குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுத்தார். இதனைத்தொடர்ந்து தம்பதியரின் நிலையை உணர்ந்து உடனடியாக பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி கட்டித்தர பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதன் பேரில் மேலதாங்கல் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நடந்து நிறைவுபெற்றது. இந்நிலையில் நேற்று வீட்டினை தம்பதியருக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு தம்பதிகளிடம் வீட்டு சாவியை ஒப்படைத்து அவர்களை வாழ்த்தினார்.அப்போது தாசில்தார்கள் சுதாகர், ஹரிதாஸ், பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவிதா, பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பார்வையற்ற தம்பதியர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக வீடு வழங்கி அவர்களிடம் புதிய வீட்டை ஒப்படைத்த கலெக்டருக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கினார்.

× RELATED உதயநிதி நடிக்கும் கண்ணை நம்பாதே