×

களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் 84.20 லட்சம் கையாடல் செய்ய கணக்கீட்டாளர் கைது

திருவண்ணாமலை, பிப்.15: திருவண்ணாமலை அடுத்த களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் ₹84.20 லட்சம் கையாடல் செய்த கணக்கீட்டாளர் கைது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.திருவண்ணாமலை அடுத்த களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பையன் என்பவரின் மகன் மணிகண்டன் கணக்கீட்டாளராகவும், வருவாய் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து வந்தார்.இவர், களம்பூர் மின்வாரியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான மின் கட்டண தொகையை கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மின்வாரிய இளநிலை பொறியாளர் சிவக்குமார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திய மின் கட்டணங்களிலில் இருந்து ₹84.20 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மணிகண்டன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.மேலும், இதுகுறித்து இளநிலை பொறியாளர் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து எஸ்பி சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மின் வாரியத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திய மின் கட்டணங்களிலில் இருந்து ₹84,20,627 பணத்தை கையாடல் செய்திருப்பது தெரிந்தது.இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து மணிகண்டனை நேற்று கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : accountant ,Kalambur Power Station ,
× RELATED தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம்...