ஆரணியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

ஆரணி, பிப். 15: ஆரணி அடுத்த சந்தவாசல் காட்டுப் பகுதியில் இருந்து  நேற்று ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு புள்ளி மான்  தண்ணீருக்காக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஆரணி கார்த்திகேயம் ரோடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நீர் அருந்தி கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள், பொதுமக்கள் புள்ளிமானை கண்டதும் அதனை பிடிக்க முயன்றபோது மான் அவர்களிடம் பிடிபடாமல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலின் பேரில் விரைந்து வந்த ஆரணி தீயணைப்பு துறை நிலை அலுவலர் பேச்சுக்காளை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்த ஆண் புள்ளிமானை வளைவிரித்து உயிருடன் பிடித்தனர்.பின்னர் ஆரணி வனத்துறையினர் மானை மீட்டு எஸ்யூ வனம் பகுதியில் உள்ள காப்புகாடு பகுதியில் விட்டனர்.

× RELATED தென்னகத்து காஷ்மீரின் அவலநிலை தேவதானப்பட்டியில் வெயிலால் தெருக்கள்