×

மயக்கபொடி தூவி துணிகரம் வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 9 சவரன் நகை திருடிய இளம்பெண் ஜோலார்பேட்டையில் பரபரப்பு

ஜோலார்பேட்டை, பிப்.15: ஜோலார்பேட்டையில் வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் மயக்கப்பொடி தூவி 9 சவரன் நகையை இளம் பெண் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ராதாம்மாள்(55). இவர் தினமும் மாலை நேரத்தில் வாக்கிங் செல்வாராம். இதேபோல் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிலிருந்து வாணியம்பாடி-திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை சந்தைகோடியூர் வழியாக வாக்கிங் சென்றார்.

அப்போது, சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் கீழ் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் புளியம்பழம் எடுத்துக்கொண்டு இருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த ராதாம்மாவை பார்த்ததும், ‘நீங்களும் புளியம்பழம் எடுக்க வந்தீர்களா?’ என பேச்சு கொடுத்தபடி அவரை பின்தொடர்ந்தார்.சிறிதுதூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இளம்பெண், மூதாட்டியின் முகத்தில் மயக்க பொடியை தெளித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த ராதாம்மாள் அணிந்திருந்த கம்மல், மோதிரம், தாலிச்சரடு, செயின் என 9 சவரன் நகைகளை திருடிக்கொண்டு அவரது சேலை முந்தானையில் மண், கல்லை கட்டிவிட்டு அங்கிருந்து மாயமானார். சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த ராதாம்மாள் நடந்த சம்பவத்தை அறிந்து கூச்சலிட்டார். பின்னர், இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நகைகளுடன் தப்பிய பெண்ணை தேடிவருகின்றனர்.
====================

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்