திரண்ட இந்து முன்னணியினர் ஜோடியாக வந்தவர்களை திருப்பி அனுப்பினர்

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் வேலூர், பிப்.15: காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் வந்த காதல் ஜோடிகளை இந்து முன்னணியினர் திருப்பி அனுப்பினர். அதேநேரத்தில் கோட்டை உட்பட 24 இடங்களில் போலீஸ் கண்காணிப்பும் போடப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்கின்றனர். இத்தினத்தை முன்னிட்டு ரோஜா மலர் விற்பனையும் களைக்கட்டியது. அதேநேரத்தில் காதலர் தினத்தை சாக்காக வைத்து காதல் ஜோடிகள் பொழுது போக்கு மற்றும் மறைவான இடங்களில் அநாகரீக செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்திய கலாசாரத்துக்கு காதலர் தின கொண்டாட்டங்கள் முரணானது என்று கூறி இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி அமைப்பு வேலூர் கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகளை விரட்டி அடிப்பதுடன், அவர்களை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி தாலிக்கயிறு, மலர் மாலைகள் ஆகியவற்றையும் வழங்குகின்றனர். இந்நிலையில் வேலூர் மற்றும் மாவட்டம் முழுவதும் காதலர் தினத்தை முன்னிட்டு பூங்காக்கள், உணவகங்கள், கோயில்களுக்கு வரும் காதலர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ, சட்டத்துக்கு புறம்போன நடவடிக்கையிலோ ஈடுபடக்கூடாது என்று எஸ்பி பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.மேலும் வேலூர் கோட்டை, கோட்டைவெளி பூங்கா, பெரியார் பூங்கா, வள்ளிமலை, ரத்தினகிரி, மகாதேவமலை, சோளிங்கர், ஏலகிரி, ஜலகாம்பாறை, அமிர்தி உட்பட 24 இடங்களில் 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 190 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இவர்கள் அங்கு நேற்று காலை முதல் மாலை வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காதலர் தினத்தை கொண்டாட கோட்டைக்கு ஜோடியாக வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும் கோட்டைக்குள் இந்து முன்னணியினர் மாலைகள், தாலிக்கயிறுடன் ஜோடியாக வரும் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரண்டு நின்றனர். இதனால் கோட்டை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related Stories: