×

வேலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளனர் வேளாண் அதிகாரிகள் தகவல்

வேலூர், பிப்.14: வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரத்து 363 விவசாயிகள் இணைந்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. கடந்த 2016ம் ஆண்டு முதல் காரீப் பருவம் முதல் 3 பருவங்களில் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, தமிழகம் முழுவதும் சம்பா, தாளடி, பிசான என 3 பருவம் அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்த காலத்தில் நெற்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதற்காக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் பதிவு ெசய்யப்படுவார்கள். ஆனால் கடன் பெறாத விவசாயிகளும் இந்த திட்டத்தில் பங்கேற்க முகவர்கள் மூலமாகவும், பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை வங்கிகளிலும் பெயர், விவரங்களை பதிவு செய்ய நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். இந்த திட்டத்தில் விவசாயிகள் 1 ஏக்கருக்கு ₹390 மட்டும் காப்பீடு செலுத்த வேண்டும். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் 10 ஆயிரத்து 363 விவசாயிகள் இணைந்துள்ளனர்.இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் முதல் நவம்பர் வரை சம்பா பருவத்தில் காப்பீடு திட்டத்தில் 10 ஆயிரத்து 363 விவசாயிகள் 19 ஆயிரத்து 149 ஏக்கர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு காப்பீடு தொகை ₹390 என 19 ஆயிரத்து 142 ஏக்கருக்கு ₹74 லட்சத்து 68 ஆயிரத்து 110 செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு காப்பீடு திட்டத்தில் 10 ஆயிரத்து 399 விவசாயிகள் 18 ஆயிரத்து 868 ஏக்கர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்’ என்றனர்.

Tags : Vellore district ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்