தமிழகம் முழுவதும் கோடை காலத்திற்கு முன்னதாக குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை போர்வெல்களில் நீர்மட்டம் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

வேலூர், பிப்.15: தமிழகம் முழுவதும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க போர்வெல்களில் நீர் மட்டம் குறித்து கணக்கெடுக்கும்படி அதிகாரிகளுக்கு உள்ளாட்சி துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில் இந்த ஆண்டு ஒருசில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை போக்கு காட்டியது. இதனால் விவசாயிகள் செய்த பயிர்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே பல பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், பஸ்கள் சிறைப்பிடிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ளதால் நகர்புறங்கள், கிராமப்புறங்களில் குடிநீர் பற்றாக்குறை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளாட்சி துறை உத்தரவிட்டுள்ளது.அதாவது, கடந்த காலங்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பதவிகளில் இருந்ததால் அவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்பட்டது.

தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தனி அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களே நேரடியாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட வேண்டும் கோடைகாலம் தொடங்கி உள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்ெகாள்ளும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுவதும் கடந்த காலங்களில் எந்தந்த மாவட்டங்களில் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டது என்பது அறிந்து குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போதும் ஒவ்வொரு மாவட்டத்தில் கோடைக்காலதத்தில் எந்தந்த பகுதியில் குடிநீர் பாதிப்பு இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கும் செயல்பாட்டில் உள்ள போர்வெல்கள், பழுதடைந்த போர்வெல்கள், செயல்பாட்டில் உள்ள போர்வெல்களில் ேகாடை காலத்திலும் வற்றாமல் உள்ள போர்வெல்கள், புதிதாக தேவைப்படும் போர்வெல்கள். கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் போர்வெல்களில் நீர்மட்டம் எந்த அளவு உள்ளது என்பது அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

அனைத்து விவரங்கள் குறித்தும் புள்ளி விவரத்துடன் ஒவ்வொரு பகுதி வாரியாகவும், கிராம வாரியாக அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அவர்கள் ஒரு வாரத்திற்குள் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். இதனை அடிப்படையாக கொண்டு தேவைப்படும் இடங்களில் புதிய போர்வெல்கள் அமைக்கவும், பழுதடைந்த போர்வெல்களை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக தனியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிதியுதவியை மாநில அரசு வழங்கும். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்நந்த கலெக்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை அறிக்கையாக அரசுக்கு அறிக்க உள்ளனர். அதன்பிறகே நிதியுதவி செய்யப்படும். அவசர தேவைக்கு பொதுநிதியில் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: