சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்றார் வக்கீல் செல்லாது என்று தகவலால் பரபரப்பு விசாரணை நடப்பதாக கலெக்டர் தகவல்

வேலூர், பிப்.15: திருப்பத்தூரில் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெண்ணின் சான்றிதழ் செல்லாது என தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சினேகா. வழக்கறிஞரான இவர் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற 10 ஆண்டுகளாக போராடி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதற்கான சான்றிதழ் தாசில்தார் வழங்கினார்.இதுகுறித்து சினேகா கூறுகையில், `சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி, மதம் அற்றவர் என எங்கள் வாழ்விற்கு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக 10 ஆண்டுகளாக கலெக்டர், சப்-கலெக்டர் என்று மனுக்களை கொடுத்து வந்தோம். இந்நிலையில் தற்போது எனக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்று வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

இதற்கிடையில், இந்த சான்றிதழ் செல்லாது என்றும், தாசில்தார் தன்னிச்சையான முறையில் சாதி, மதம் அற்றவர் என சான்று வழங்கி உள்ளதாகவும் வருவாய்த்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு கலெக்டரும் சட்டத்தில் இடமில்லை என்றும், சான்றிதழை தாசில்தார் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியதாக தகவல் பரவியது.இதுகுறித்து கலெக்டர் ராமனிடம் கேட்டபோது, ‘இந்த சான்றிதழ் பெற்றதால் அவருக்கு எந்த நன்மையும் இல்லை. தீமையும் இல்லை. சட்டத்தில் இதுபோன்று சான்றிதழ் கொடுக்க இடம் இருக்கிறதா? இல்லையா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: