2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு

திருபுவனை, பிப். 15: விழுப்புரம் மாவட்டம் சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாரிவள்ளல். இவரது மனைவி அம்சவள்ளி (26). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரிடம் கோபித்துக் கொண்டு திருபுவனை பிள்ளையார் கோயில் வீதியில் அம்சவள்ளி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பாரிவள்ளல் தனது குழந்தைகளை சின்னக்குப்பத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த அம்சவள்ளி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம், தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்சவள்ளி இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertising
Advertising

Related Stories: