கிரண்பேடியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் தர்ணா

புதுச்சேரி, பிப். 15: புதுவை கவர்னர் கிரண்பேடியின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று தர்ணா நடைபெற்றது. கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ராமச்சந்திரன், தமிழ்செல்வன், பிரபுராஜ், சீனுவாசன், சத்யா, கட்சியின் மூத்த உறுப்பினர் முருகன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு உடனடியாக வெளியேறக்கோரி கோஷமிட்டனர். மத்திய பாஜக அரசின் ஏஜெண்டாக கிரண்பேடி, புதுச்சேரியில் கவர்னராக செயல்பட்டு புதுச்சேரி வளர்ச்சியை முடக்கி விட்டதாக குற்றம் சாட்டினர். மாநில அரசின் ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாவிடில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனர்.  அப்போது அங்கு வந்த சீனியர் எஸ்பி அபூர்வ குப்தா, போராட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்தார். இதனால் அங்கு பரபரப்பு

ஏற்பட்டது.
Advertising
Advertising

Related Stories: