கவர்னரை திரும்ப பெற அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி, பிப். 15: புதுச்சேரி சட்டமன்ற அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ அளித்த பேட்டி: கடந்த 2 நாட்களாக முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஹெல்மெட் சம்பந்தமாகவும், பல்வேறு நிர்வாக ரீதியான செயல்பாடுகள் குறித்தும், கவர்னரின் செயலை கண்டித்தும் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் என்பது பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மலிவு விளம்பரத்துக்காக நடத்தப்

Advertising
Advertising

படுகிறது.  இன்று புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் பயம் கலந்த பீதியுடன் நடக்கக் கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர துணை ராணுவம் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய கவர்னர் மற்றும் முதல்வரின் மலிவு விளம்பர அரசியல் போட்டிதான் காரணம். எனவே, மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவையும், கெட்டப் பெயரையும் ஏற்படுத்திய கவர்னரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: