×

எம்விஐடி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி, பிப். 15: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அனைத்து பொறியியல் துறை சார்பில் மிடிலென்ஸ்-2019 எனும் தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மலர்க்கண்ணன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் எம்எல்ஏ, செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராமன் கருத்தரங்க அறிக்கை வாசித்தார்.

தலைமை விருந்தினராக புதுவை மண்டல சிஐஐ தலைவர் மற்றும் லிப்ராக்ஸ் ரப்பர் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி நந்தகுமார் கலந்து கொண்டு, தொழில்துறையில் தன்னியமாக்கல் தொழில்புரட்சி பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஆய்வு கட்டுரைகள், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறனை வெளிப்படுத்தினர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மின் மற்றும் மின்னணு துறை தலைவர் அருண்மொழி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் சிவக்குமர் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


Tags : National Seminar ,MVID College ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்