பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சங்கராபுரம், பிப். 15: சங்கராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சர்மா வரவேற்றார். உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மரக்காணம்:  மரக்காணம் காவல் நிலையம் சார்பில் மரக்காணத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு. சாலை விதிகளை கடைபிடித்தல், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள், அணியாமல் ஓட்டும் போது சாலை விபத்து ஏற்பட்டால் உண்டாகும் பாதிப்புகள், இது போல் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

× RELATED கடும் வெயிலால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்