மா.கம்யூ., கட்சியினர் 67 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, பிப். 15: உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டாத்தூர் கிராமத்தில் தரமற்ற அரசு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளை செயலாளர் ரகு தலைமை தாங்கினார். கலியன், ஜெயபால், தங்கமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட செயற்குழு ஸ்டாலின்மணி, ஒன்றிய செயலாளர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

Advertising
Advertising

கிளை செயலாளர் ஜெயராமன், தர்மலிங்கம், பத்மநாபன், பூங்கொடி, அலமேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.அப்போது அங்கு வந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் ேபாலீசார், ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி இல்லை என கூறி தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து கிளை செயலாளர் ரகு உள்ளிட்ட 67 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories: