×

சிறப்பு மனுநீதி முகாம்

கள்ளக்குறிச்சி, பிப். 15:விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் அறிவுறுத்தலின் பேரில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் வரும் 18ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணிவரை கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய  மூன்று தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே, சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கள்ளக்குறிச்சி சார் ஆட்சியிரிடம் மனு கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உளுந்தூர்பேட்டை கடைவீதியில் ஆக்கிரமிப்பு பொருட்கள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை, பிப். 15: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, பாண்டூர் ரோடு, விருத்தாசலம் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகள் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து சாலையின் ஓரம் சிறுகடைகள் மற்றும் சாலையோர ஓட்டல்கள் வைத்து ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கிருந்த கடைகள் மற்றும் பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்து, மினிடெம்போவில் ஏற்றி காவல்நிலையத்துக்கு எடுத்து சென்றனர். 50க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்பு பொருட்களை போலீசார் திடீரென பறிமுதல் செய்ததால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

Tags : Special Court of Human Rights ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை