வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்க கோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு

சிதம்பரம், பிப். 15:   கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் பழைய கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராம மக்கள் வெள்ள நீரால் பாதிப்படைந்தனர். வீடுகள், பயிர்கள், தோட்டப்பயிர்கள் சேதமடைந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டன. அதில் கீழக்குண்டலப்பாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 81 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கான காப்பீட்டு தொகை யாருக்குமே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 இந்நிலையில், நேற்று காலை பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கொள்ளிடம் தடுப்பணை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவி.மணிவண்ணன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

× RELATED இளம்பெண் கவியரசி கடத்திச் செல்லப்பட்டதாக கிராம மக்கள் புகார்