ஒறையூரில் சுகாதார சீர்கேடு

பண்ருட்டி, பிப். 15:பண்ருட்டி அருகே ஒறையூர், எனதிரிமங்கலம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள முக்கிய சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களும் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர். ஒறையூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த இரு கிராமங்களிலும் முக்கியசாலையில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர்.இதன் காரணமாக அந்த சாலையில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மூக்கை பிடித்தபடிதான் சுமார் அரை கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. பல வருடங்களாக இப்பிரச்னை தீர்க்கப்படாமலே உள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் நேரில் சென்று இப்பகுதியை தூய்மையாக வைத்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


× RELATED திறந்தவெளி கழிவறையான திருத்தங்கல் மயான சாலை சுகாதார சீர்கேடு அதிகரிப்பு