×

விளையாட்டு தினவிழா

திருவில்லிபுத்தூர், பிப். 14: திருவில்லிபுத்தூர் அருகே, பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி, சத்யா வித்யாலயா நர்சரி பள்ளி, அக்ஷயா ஹைடெக் பள்ளிகள் ஆகியவை சார்பில், சத்யா வித்யாலயா பள்ளி மைதானத்தில் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. பள்ளிச் சேர்மன் குமரேசன் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், சிஇஓ அரவிந்த், முதல்வர் முருகதாசன், துணைமுதல்வர் சத்தியமூர்த்தி, பள்ளி ஆலோசகர் பாரதி மற்றும் நிர்வாக அதிகாரி அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, தேசிய பூப்பந்து (பாரா) விளையாட்டு வீரர் பத்ரிநாரயணன், இந்திய கிராமப்புற கபடி குழு தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு தின விழாவில் தொடர் ஓட்டம், சிலம்பாட்டம், டேக்வாண்டோ, யோகா, ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மூலம் மாணவ, மாணவியர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில் தேசிய மற்றும் மாநில அளவில் யோகா, சிலம்பாட்டம், செஸ் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கபட்டன. அரவிந்த் நன்றி தெரிவித்து பேசினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...